search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேசன் ராய்"

    ஜேசன் ராய் 89 பந்தில் 114 ரன்கள் விளாச பாகிஸ்தானுக்கு எதிராக 341 ரன்களை சேஸிங் செய்து அசத்தல் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 340 ரன் குவித்தது.

    பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 63-வது போட்டியில் ஆடும் அவருக்கு இது 9-வது செஞ்சூரியாகும். பாபர் ஆசம் 112 பந்தில் 115 ரன்னும் (13 பவுண்டரி, 1 சிக்சர்), முகமது ஹபீஸ் 59 ரன்னும், பகர் ஜமான் 57 ரன்னும் எடுத்தனர். டாம் குர்ரான் 4 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய இங்கிலாந்து 49.3 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 341 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்று சாதித்தது.

    தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 8-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 89 பந்தில் 114 ரன்னும் (11 பவுண்டரி, 4 சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 64 பந்தில் 71 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். முகமது ஹஸ்னைன், இமாத் வாசிம் தலா 2 விக்கெட்டும் ஜுனைத்கான், ஹசன் அலி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இங்கிலாந்தின் வெற்றியில் பாபர் ஆசமின் சதம் பலன் இல்லாமல் போனது. இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.



    முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு இருந்தது. 2-வது மற்றும் 3-வது போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது. கடந்த போட்டியில் இங்கிலாந்து 359 ரன் இலக்கை எடுத்தது. தற்போது 341 ரன் இலக்கை எடுத்து 3 விக்கெட்டில் வென்றுள்ளது. இதனால் உலகக்கோப்பையில் அந்த அணி கடும் சவாலாக விளங்கும். இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் லீடஸ் மைதானத்தில் நாளை நடக்கிறது.
    வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய், 3-வது வீரர் ஜோ ரூட் ஆகியோர் சதம் விளாசினர். #WIvENG
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் நாளைமறுநாள் (28-ந்தேதி) ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

    இந்தத்தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை . டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் லெவன் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பேர்ஸ்டோவ் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜேசன் ராய் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தனர்.

    ஜேசன் ராய் 82 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 110 ரன்கள் சேர்த்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். ஜோ ரூட் 81 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 114 ரன்களில் ஆட்டமிழந்தார்.



    மொயீன் அலி 18 பந்தில் 24 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 14 பந்தில் 22 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.

    பின்னர் 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் லெவன் அணி களம் இறங்கியது. அந்த அணி 43.5 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    கொழும்பில் நடைபெற்ற டி20 போட்டியில் ஜேசய் ராய் அதிரடியால் இலங்கை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடர் கொழும்பில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலக்கை பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பட்லர் 13 ரன்னிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 4 ரன்னிலும், மோர்கன் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.



    ஆனால் தொடக்க வீரர் ஜேசன் ராய் 36 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 69 ரன்கள் குவித்தா்ர. பென் ஸ்டோக்ஸ் 26 ரன்களும், மோயீன் அலி 27 ரன்களும், ஜோ டென்லி 20 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

    பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் டிக்வெல்லா (3),  குசால் மெண்டிஸ் (1) சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.



    கேப்டன் திசாரா பெரேரா மட்டும் தாக்குப்பிடித்து 31 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் 57 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை 20 ஓவரில் 157 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோ டென்லி நான்கு விக்கெட்டுக்களும், அடில் ரஷித் மூன்று விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்.

    இதனால் இங்கிலாந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அளித்தனர். #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தம்புல்லாவில் தொடங்கியது. பகல்-இரவு போட்டியினான முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஜேசன் ராய் 27 பந்தில் 24 ரன்களும், பேர்ஸ்டோவ் 24 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அடுத்து வந்த ஜோ ரூட்டும், கேப்டன் மோர்கனும் அதிரடியை தொடங்கினார்கள். ஜோ ரூட் 28 பந்தில் 25 ரன்களும், மோர்கன் 11 பந்தில் 14 ரன்களும் அடித்திருந்த போது இங்கிலாந்து 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.

    அப்போது கனமழை பெய்ய ஆரம்பித்தது. நீண்ட நேரம் மழை விடாததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தார். இதனால் முடிவின்றி முதல் ஆட்டம் முடிவுக்கு வந்ததது. மழையால் ஆட்டம் தடைபட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 2-வது போட்டி தம்புல்லாவில் நாளைமறுநாள் (13-ந்தேதி) நடக்கிறது.
    வலது கை சுண்டு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஜேசன் ராய் களம் இறங்குவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று 5 மணிக்கு தொடங்குகிறது. 2-வது போட்டியில் இங்கிலாந்து பீல்டிங் செய்யும்போது தொடக்க வீரர் ஜேசன் ராயின் வலது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது.



    இதனால் இன்றைய போட்டியில் அவர் களம் இறங்குவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்புதான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும் என இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது.

    ஒருவேளை உடற்தகுதி பெறாவிடில் மாற்று வீரரை களமிறக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் சாம் பில்லிங்ஸை அவசரமாக அழைத்துள்ளது. ஜேசன் ராய் இந்தியாவிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் 35 பந்தில் 38 ரன்களும், 2-வது ஆட்டத்தில் 42 பந்தில் 40 ரன்களும் சேர்த்தார்.
    ×